மரக்கன்று நடுவிழா – “1000 பனை மரக்கன்று மற்றும் பாரம்பரிய விதைகள் நடுதல் விழா “

2025, ஆகஸ்ட், 2 ஆம் தேதி, IQAC, நுண்ணுயிரியல் துறையும் மற்றும் NSS அமைப்பும் இணைந்து நடத்திய பனை மரக்கன்று நடுவிழா மற்றும் பாரம்பரிய விதை விதைத்தல் நிகழ்வு சென்னீர்குப்பம் தாங்கல்குளம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வை திருமதி லதா அவர்கள் (ரூட் லேம்ப் அறக்கட்டளையின் நிறுவனர்) முறையாக சொற்பொழிவாற்றி துவங்கி வைத்தார்கள். சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் மேலும் சுற்றுச்சூழலை மேம்பாடுடைய செய்வதும் இன்றைய இளைஞர்களின் கடமையாக வலியுறுத்தினார்.
இளங்கலை நுண்ணறிவியல் முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பனை மரக்கன்றையும் அரிய வகை விதையையும் மண்ணில் ஊன்றினார்கள். சிறு குட்டைகளிலும் நீர் தேக்கத்திலும் நீரினை பாதுகாக்கும் விதமாக தாங்கள் குளம் இருக்கும் பகுதியை தெரிவு செய்தனர். அந்த நிலப்பகுதியில் இருக்கும் நீர் நிலைகளின் தன்மையைப் புதுப்பிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். இதனால் நிலத்தடி நீரின் தன்மை அதிகரிக்கும் என்பதனையும் மாணவர்களுக்கு உணர்த்தினோம்.
Photo Gallery



